'நான் கர்ப்பமா இருக்குறப்போ...' எப்படியெல்லாம் பேசினாங்க தெரியுமா...? 'அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணம்...' - உண்மையை உடைத்த தம்பதி...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கல் ஓப்ராவிற்கு அளித்த பேட்டி பல காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளது.

இங்கிலாந்து இளவரசரான ஹாரி, அமெரிக்காவை சேர்ந்த நடிகை மெகன் மார்கலை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து தாயான மேகனுக்கு ஒரு மகனும் பிறந்தார்.
இந்நிலையில் குழந்தை தொடர்பான பல விவாதங்கள் குடும்பத்திற்குள் எழவே, ஒரு கட்டத்தில் ராஜ வாழ்க்கையே வேண்டாம் என்று ஹாரியும், மெகனும் முடிவு செய்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஹாரியும், மெகனும் கலந்து அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும், சோகமான சில நிகழ்வுகளும் பேசப்பட்டது.
அதில் மெகன் கூறியதாவது, 'நான் முதலில் கர்ப்பமாக இருந்தபோது எங்கள் மகன் ஆர்ச்சியை குறித்து சிலர் விவாதங்கள் நடத்தினர் அவனின் நிறம் என்னவாக இருக்கும், அவன் கருப்பாக இருப்பானோ என்று எல்லாம் பேசினார்கள் இது எனக்கு வேதனை அளிப்பதாக இருந்தது.
எனக்கு ராஜ குடும்பத்து விதிமுறைகள் எதுவும் எனக்கு தெரியாது என்பதால் அந்த சூழலுக்கு ஏற்றார் போல வாழ கடினமாக இருந்ததால் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
ஒரு சில நேரங்களில் சரியான முடிவு எடுத்துள்ளோமா என்ற கேள்வி எழும், வாழ்க்கையே வெறுப்பது போல மாறும். ஒரு சில நேரங்களில் எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று ஹாரியிடம் தெரிவித்தேன். ஹாரி மட்டுமே எனக்கு அங்கு துணை. என்னால் ஹாரி பலவற்றை இழந்துள்ளார்.
நாங்கள் அரச குடும்பத்திலிருந்து வெளிவந்ததற்கு காரணம் என் மகன் ஆர்ச்சியின் பாதுகாப்பே காரணம். அவர்கள் ஆர்ச்சியை இளவரசராக அறிவிக்கவில்லை. எலிசபெத் ராணி எப்பொழுதுமே என்னிடம் அன்பாக இருப்பார். ஆனால் என்னை யாரும் அங்கு பாதுகாக்கவில்லை.
நான் இப்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறேன், எங்கள் குடும்பத்திற்கு ஒரு பெண் குழந்தை வரப் போகிறாள். எங்களுடைய முந்தைய வாழ்க்கை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை சொல்ல வேண்டும் என்று திட்டமிடவில்லை. எனக்கு நடந்ததை மட்டுமே தான் சொல்லியுள்ளேன்' என மெகன் கூறிய விஷயங்களை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
