Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

மருத்துவமனையில் நடிகர் போண்டா மணி நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டா மணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Minister update about Actor bonda mani Treatment

Also Read | நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடலை புதுமையான வழியில் பிரதே பரிசோதனை செய்த மருத்துவர்கள்.!

போண்டா மணி

நகைச்சுவை நடிகரான போண்டா மணி இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்தார் மணி. அது துவங்கி பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக மணி நடித்திருக்கிறார். குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மணி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிகிச்சை

அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து விட்டதால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மணியின் நண்பரும் நகைச்சுவை நடிகருமான பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,"'அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

நேரில் வந்த அமைச்சர்

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு இன்று சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் மணியை சந்தித்த அமைச்சர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிகிச்சைக்கான முழு செலவும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதுகுறித்து அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | Bonda Mani : "உதவி செய்யுங்க..!..".. ICU-வில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி - கதறி அழுத சக நடிகர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Minister update about Actor bonda mani Treatment

People looking for online information on Bonda Mani, Bonda mani Treatment, Health Minister, Health Minister Ma Subramanian will find this news story useful.