விபத்துல சிக்கி ஆளில்லாத தீவுல மாட்டிக்கொண்ட நபர்.. உயிரை காப்பாத்த 5 நாளா அவர் செஞ்சதை கேட்டு திகைச்சுப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடல் அலையில் சிக்கி, ஆளில்லாத தீவில் சிக்கிக்கொண்ட நபர் ஒருவர் மீட்கப்படும் வரையில் கடல்நீரை குடித்து வந்திருக்கிறார்.

Also Read | தகர்க்கப்படும் 100 மீட்டர் உயர இரட்டை கோபுரங்கள்.. இறுதிக்கட்ட பணியில் அதிகாரிகள்.. மிரளவைக்கும் தகவல்கள்.!
வீழ்த்திய அலை
பிரேசிலை சேர்ந்த நெல்சன் நெடி என்பவர் இந்த மாத தொடக்கத்தில் க்ருமாரி கடற்கரையில் உள்ள கண்காணிப்பு மையமான மிராடோர் டோ ரோன்காடருக்குச் சென்றிருக்கிறார். அவர் ஒரு பாறையின் மேல் நின்று அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பிரம்மாண்ட அலை அவரை வீழ்த்தியிருக்கிறது. இதனால் பாறையில் மோதிய அவர் தொடர்ந்து கடல் அலைகளில் சிக்கிக்கொண்டார்.
கடல் ஆக்ரோஷமாக இருந்ததால் அவரால் அதில் இருந்து வெளியேற முடியவில்லை. இதனால் 2 மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத பால்மாஸ் தீவுக்கு அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். மயங்கிக்கிடந்த அவருக்கு நடந்தது புரிய சில நிமிடங்கள் பிடித்திருக்கிறது. அதன்பிறகு இரவு தூக்கத்திற்காக ஒரு குகையை கண்டுபிடித்திருக்கிறார் அவர். அதில் இரவை கழித்த நெல்சன், அடுத்தநாள் தீவை சுற்றி வந்திருக்கிறார். அப்போது யாரோ விட்டுச் சென்ற தற்காலிக கூடாரம், இரண்டு தண்ணீர் பாட்டில்களை கண்டுபிடித்திருக்கிறார் அவர்.
முயற்சி
மேலும், தரையில் 2 எலுமிச்சம்பழங்களை அவர் பார்த்திருக்கிறார். அதனை தோலுடன் உண்ணவும் செய்திருக்கிறார். கூடாரத்தில் இருந்த போர்வையை கொண்டு கடலில் பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார் நெல்சன். ஆனால், ஏதும் பலனிக்கவில்லை.
மூன்றாம் நாளில் நீச்சலடித்து அந்த தீவில் இருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் நெல்சன். ஆனால், அலைகள் மூர்க்கத்தனமாக தாக்கியதால் மீண்டும் தீவுக்கே திரும்பியிருக்கிறார். அடுத்தநாள் கூடாரத்தில் இருந்த மரங்களை கொண்டு சிறிய படகு தயாரித்திருக்கிறார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் சோர்வடைந்த அவர் கரித்துண்டுகளை பார்த்திருக்கிறார். குரங்குகள் ஒருமுறை கரித்துண்டுகளை உண்பதை அறிந்திருந்த அவர் தானும் அவற்றை சாப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கையில் இருந்த நீர் தீர்ந்து போனதால் கடல்நீரை குடித்து வந்திருக்கிறார். இப்படி சோர்வுடனும், பசியுடனும் தீவில் சிக்கிக்கொண்ட நெல்சன் 5 வது நாள் ஜெட் ஸ்கையில் சிலர் அந்த பகுதியில் சென்றுகொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அவர்களுக்கு சைகை காட்ட, அவர்களும் நெல்சனை கண்டதும் தீவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒருவழியாக நெல்சன் தீவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பிரேசில் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
Also Read | காதலியை மீட் பண்ண இளைஞர் போட்ட பிளான்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

மற்ற செய்திகள்
