தஞ்சையில் காணாம போன 300 வருஷம் பழமை வாய்ந்த தமிழ் பைபிள்.. 17 வருசத்துக்கு அப்புறம் லண்டன்'ல கெடச்சது எப்படி??

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jul 01, 2022 06:04 PM

தஞ்சாவூர் நூலகம் ஒன்றில் இருந்து சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பைபிள் கடந்த 2005 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு, இதுகுறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

17 th century translated tamil bible lost in thanjavur found in london

Also Read | "ஆட்டோ ஓட்டுநர் TO முதலமைச்சர்".. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வரான ஏக்நாத் சிங்.. யார் இவர்?

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 'பைபிள்'

1706 ஆம் ஆண்டு, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க், தரங்கம்பாடி என்னும் பகுதிக்கு வந்த போது, அங்கே ஒரு அச்சகம் அமைத்திருந்தார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களை அவர் அங்கே அச்சடிக்கத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி, பைபிளையும் அவர் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதனை மற்றொரு கிறிஸ்துவ தூதர், அப்போது தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்த செர்ஃபோஜி மன்னர் கையில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போன பைபிள்

இதன் பின்னர், தமிழ்நாடு அரசு இந்த அரிய வகை பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தது. 300 ஆண்டுகளுக்கு முன், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பைபிள் இது என்பதால், மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பினை பெற்று வந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்த பைபிள் திடீரென காணாமல் போனதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. மேலும், இந்த பைபிள் எங்கே இருக்கிறது என்றும் தேடப்பட்டு வந்தது.

17 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தகவல்

அதன்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தீவிரமாக நடத்திய விசாரணையில், இந்த தமிழ் பைபிள் குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தஞ்சாவூரில் காணாமல் போன பைபிள் படமும், தற்போது லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களில் உள்ள பைபிள் படமும் ஒன்றாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.

தொடர்ந்து, லண்டனில் இருந்து அந்த பைபிளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, மீண்டும் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "நல்ல மழை, ரோடு ஃபுல்லா தண்ணி.." பேருந்து டிரைவர் செய்த காரியம்.. செவிலியர் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சி வீடியோ..

Tags : #TAMIL BIBLE #THANJAVUR #LONDON #தமிழ் பைபிள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 17 th century translated tamil bible lost in thanjavur found in london | Tamil Nadu News.