நெனச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு.. லாரி டிரைவரை திக்குமுக்காட வைத்த லாட்டரி டிக்கெட்.. ஒரே நாளில் கோடீஸ்வரான அதிர்ஷ்டசாலி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 01, 2022 05:30 PM

அமெரிக்காவை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு லாட்டரியில் எதிர்பாராத விதமாக ஜாக்பாட் அடித்திருக்கிறது.

USA Truck driver Won 7.9 Crore Jackpot in Lottery

Also Read | "ஆட்டோ ஓட்டுநர் TO முதலமைச்சர்".. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வரான ஏக்நாத் சிங்.. யார் இவர்?

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். அப்படித்தான் நடந்திருக்கிறது அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு.

லாட்டரி

48 வயதான இல்லினாய்ஸ் அமெரிக்காவின் மிச்சிகனில் ட்ரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இல்லினாய்ஸ்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் வழக்கம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அதிகபட்சமாக 2000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ஒன்றரை லட்ச ரூபாய்) வரையில் தனக்கு பரிசு கிடைக்கலாம் என இல்லினாய்ஸ் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், நடந்ததே வேறு.

USA Truck driver Won 7.9 Crore Jackpot in Lottery

லாட்டரி டிக்கெட்டை சுரண்டிய இல்லினாய்ஸ் அதனை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. காரணம் அவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 7.9 கோடி) தொகை பரிசாக கிடைத்திருப்பதாக காட்டியுள்ளது அந்த அப்ளிகேஷனில். இதுகுறித்து பேசிய அவர்," நான் லாட்டரி டிக்கெட்டை வாங்கிவிட்டு ட்ரக்கில் ஏறியதும் அதனை சுரண்டினேன். பின்னர் வழக்கம்போல அதனை ஸ்கேன் செய்து பார்த்தபோது 10 லட்சம் அமெரிக்க டாலர்களை நான் வென்றுள்ளதாக காட்டியது.ஆனாலும் நான் நம்பவே இல்லை. ஏஜென்சியில் இருந்து கால் வரும் வரை நான் குழப்பத்திலேயே இருந்தேன்" என்றார்.

புது ட்ரக்

லாட்டரியில் கிடைத்த பணத்தின் மூலமாக புது ட்ரக் ஒன்றை வாங்க இருப்பதாகவும், மீதி பணத்தை சேமிக்க இருப்பதாகவும் கூறிய இல்லினாய்ஸ்,"எனக்கு அதிகபட்சமாக 2000 டாலர்கள் வரை பரிசு கிடைக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு மில்லியன் டாலர் பரிசு எனக்கு கிடைக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.

அமெரிக்காவில் ட்ரக் ஓட்டுனருக்கு லாட்டரியில் 7.9 கோடி ரூபாய் ஜாக்பாட் கிடைத்திருப்பது குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகிறார்கள்.

Also Read | தல தோனிக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டு வைத்தியர்.. என்னப்பா ஆச்சு?

Tags : #USA #TRUCK DRIVER #USA TRUCK DRIVER #TRUCK DRIVER WON LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. USA Truck driver Won 7.9 Crore Jackpot in Lottery | World News.