மெக்காவின் அதிசய கிணறு.. 1000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் மர்மம்.. அறிவியலை மிஞ்சிய ஜம் ஜம் தண்ணீர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சவூதியின் மெக்காவில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ஊற்று கிணறு ஒன்று தொடர்ந்து மக்களின் தாகத்தை போக்கி வருகிறது.
மெக்கா
சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. வருடந்தோறும் உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரைக்காக செல்கிறார்கள். இவர்களுக்கு தாகம் தீர்க்க பயன்படும் இந்த நீரை புனித தீர்த்தமாக தங்களது வீட்டில் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் இஸ்லாமிய மக்கள். தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படும் இந்த நீர் ஒரு ஊற்றில் இருந்து சுரக்கிறது. தொடர்ந்து எடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இந்த புனல் ஊற்று வற்றுவதே இல்லை.
ஜம்ஜம்
மெக்காவின் கிழக்குப் பகுதியில் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊற்று நபிகள் காலத்திலேயே இருந்ததாக நம்பப்படுகிறது. ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நபிகள் நாயகம் தனது மனைவி ஹஜர் மற்றும் மகன் இஸ்மாயிலை இன்றைய காஃபா அமைந்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது இறைக்கட்டளையின்படி அவர்களை அங்கேயே தனித்துவிட்டுச் நபி சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், கைவசம் இருந்த உணவு மற்றும் நீர் தீர்ந்து போனவுடன் குழந்தை இஸ்மாயில் அழவே, ஹஜருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, இஸ்மாயில் தனது பிஞ்சுக் கால்களால் அந்த பாலை நிலத்தில் எட்டி உதைக்க அங்கே நீர் சுரந்திருக்கிறது. பெருக்கெடுத்த நீரை கைகளால் மண்ணைக் குவித்து "நில்.. நில்" என ஹஜர் கூறவே, அந்த இடத்தில் இருந்து தொடர்ந்து நீர் வெளிவந்துகொண்டே இருந்தது. அரபு மொழியில் ஜம்ஜம் என்பதற்க்கு நில் நில் என்பது பொருளாகும்.
இதனாலேயே இதனை ஜம்ஜம் நீர் என்று அழைக்கிறார்கள் அந்த மக்கள். இந்த நீர் மனிதர்களின் பசியை போக்கும் எனவும், நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனவும் நம்புகிறார்கள் இஸ்லாமிய மக்கள்.
வற்றாத ஊற்று
இந்த ஊற்றின் மேலே மூடி போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழே 2.5 மீட்டர் ஆழத்தில் தளம் அமைக்கப்பட்டு கிணற்றின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கயிறு கொண்டு இந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது மின்சார மோட்டார்கள் மூலமாக வினாடிக்கு 18.5 லிட்டர் வரையில் நீர் இங்கிருந்து எடுக்கப்படுகிறது.
இந்த கிணற்றின் வாளி மற்றும் கப்பி போன்ற பாரம்பரிய பொருட்களை இன்றும் மெக்காவில் உள்ள மசூதியில் பராமரித்துவருகிறார்கள். மெக்காவின் கீழே ஊறும் இந்த நீரை சுத்திகரித்து சேமிக்க மிகப்பெரிய குழுவே இயங்கிவருகிறது. மேலும் ஒரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் ஜம்ஜம் தண்ணீர் மெதினாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் நீர்தேக்கத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது.
16,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர் தேக்கத்தில் இருந்து நபியின் மசூதிக்கு தண்ணீரானது விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 100 முறை நீரின் மாதிரிகளை நுண்ணுயிரிகள் மற்றும் ரசாயன மாதிரி சோதித்து அதனை தரத்தினை உறுதி செய்கிறது சவூதி அரசு.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களின் தாகத்தினை போக்கும் இந்த நீர் தேவைக்கு ஏற்ப சுரந்துகொண்டே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெற்று பாலைவனத்தில் தோன்றி, எடுக்க எடுக்க மக்களுக்காக சுரந்துகொண்டே இருக்கும் இந்த கிணறு உண்மையிலேயே அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயம் தான்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8