உலகின் மிக விலை உயர்ந்த விவாகரத்து... பில்லியன் டாலர்களில் ஜீவனாம்சம் தரும் ரஷ்யாவின் விளாடிமிர் பொடனின்
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக விலை உயர்ந்த விவாகரத்து வழக்கை சந்திக்கிறார் ரஷ்யாவின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் ஆன விளாடிமிர் பொடனின். ஜெஃப் பீசோஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் விவாகரத்துகளை விட விளாடிமிர் பொடனின் விவாகரத்து உலகின் மிக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
விளாடிமிர் பொடனின் முன்னாள் மனைவி நடாலியா தனது முன்னாள் கணவரிடமிருந்து விவாகரத்து ஜீவனாம்ச தொகையாக 50% நிறுவனப் பங்குகளை கேட்கிறார். பொடனின் உடைய உலோக நிறுவனத்தின் 50% பங்குகளை கேட்கிறார் நடாலியா. இது சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு உடையது எனக் கூறப்படுகிறது.
விளாடிமிர் பொடனின் அந்த நிறுவனத்தில் 3-ல் 1% பங்கை தனக்குச் சொந்தமாகக் கொண்டுள்ளார். பொடனின் தற்போது ஐக்கிய நாடுகளின் உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு வழக்கை எடுத்துக்கொள்ளுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறாராம். சமீப காலமாக விலை உயர்ந்த விவாகரத்து வழக்குகள் லண்டன் விவாகரத்து நீதிமன்றம் நோக்கி வருகின்றன.
விளாடிமிர் பொடனின் மற்றும் நடாலியா திருமண தம்பதியர் ஆக 31 ஆண்டுகாலம் வாழ்ந்து உள்ளனர். பொடனின் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் அதனால் தான் விவாகரத்து வரை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய முறைப்படியிலான விவாகரத்தில் நடாலியா தான் 40 மில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாகப் பெற்றதாகக் கூறுகிறார். ஆனால், விளாடிமிர் தான் 84 மில்லியன் வரை கொடுக்கும் சூழல் வந்ததாகக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரின் விவாகரத்துகளின் ஜீவனாம்ச தொகையே விலை உயர்ந்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.