'ஏங்க... அந்த ஏலியன்ஸ் நீங்க தானா'?.. பாலைவனத்தில் திடீரென தோன்றிய மர்ம உலோகப் பொருள்!.. ராத்திரியோட ராத்திரியா 4 பேர் செய்த சம்பவம்!.. இன்னும் விலகாத மர்மம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் உட்டா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விநோத உலோகப்பொருள், திடீரென மாயமான நிலையில், அதை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

ரெட் ராக் பாலைவனத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருந்த 12 அடி உயர ஒளிரும் உலோகப் பொருள் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இது ஏலியன்களின் வேலையாக இருக்கலாம் என பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அந்த பொருள் மாயமாக மறைந்தது.
இந்நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இரவோடு இரவாக அந்த பொருளை கடத்திச்செல்லும் புகைப்படங்களை அங்கு மறைந்திருந்து படம்பிடித்த பெர்னார்ட்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், தற்போது வரை அந்த மர்ம உலோகப்பொருள் எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், உட்டா பாலைவனத்தில் காணப்பட்டதைப் போலவே மர்ம உலோகப் பொருள் ஒன்று ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்ம உலோகப் பொருள் சர்ச்சை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
