அக்கா கூட வந்த போட்டி.. குட்டி FLIGHT-அ எடுத்துக்கிட்டு கிளம்புன சிறுவன் செஞ்ச 2 உலக சாதனை.. கின்னஸ் நிர்வாகமே மிரண்டு போய்டுச்சு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 25, 2022 03:37 PM

இலங்கிலாந்தை சேர்ந்த மேக் ரூதர்போர்டு என்பவர் இரண்டு உலக சாதனைகளை படைத்திருக்கிறார். இதற்கு முழு காரணமாக அமைந்திருந்திருக்கிறார் அவரது மூத்த சகோதரி.

Mack Rutherford becomes youngest pilot to fly solo around the world

Also Read | "கடைசிவரை போராடி பார்த்தோம்".. கடலில் மூழ்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!

உலக சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த மேக் ரூதர்போர்டுக்கு தற்போதைய வயது 17 ஆகும். இவருடைய மூத்த சகோதரி சாரா இந்த ஆண்டு துவக்கத்தில் 2 உலக சாதனைகளை படைத்திருந்தார். மிக இளம் வயதில் உலகை விமானத்தில் சுற்றிவந்த பெண் என்னும் சாதனையை அவர் படைக்க, அதனால் உத்வேகம் அடைந்த மேக் தானும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். தனியாளாக உலகை சுற்றிவர நினைத்த அவர் அதற்காக சிறிய விமானம் ஒன்றையும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

Mack Rutherford becomes youngest pilot to fly solo around the world

கடந்த 2005 ஆம் ஆண்டு பிறந்த மேக்-கின் பெற்றோரில் ஒருவர் பெல்ஜியத்தையும் மற்றொருவர் பிரிட்டனையும் சேர்ந்தவர். சிறுவயது முதலே விமான இயக்கத்தில் ஆர்வமாக இருந்த மேக், தனது சகோதரியின் சாதனையால் பெருமளவில் உத்வேகம் அடைந்திருக்கிறார். இதனையடுத்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி பல்கேரியாவில் உள்ள சோபியா என்னும் இடத்தில் இருந்து தனது பயணத்தை துவங்கியுள்ளார் மேக்.

பயணம்

தனிநபராக விமானத்தை இயக்கிய மேக், 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இறுதியாக ஆகஸ்டு 24 ஆம் தேதி அவர் மீண்டும் சோபியாவில் தனது விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதன்மூலம் 2 கின்னஸ் சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். அதாவது மிக இளம் வயதில் தனியாளாக உலகை சுற்றிவந்த நபர் மற்றும்  குறைவான இரவு நேரங்களில் பயணித்து உலக சுற்றிவந்த இளவயது நபர் என்ற இரண்டு சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.

Mack Rutherford becomes youngest pilot to fly solo around the world

மேக் பயணித்த விமானம் மிகவும் சிறியது என்பதால், இரவு நேரங்களில் பெரும்பாலும் தனது பயணத்தை தவிர்த்திருக்கிறார். பகலில் மட்டுமே பயணம் செய்த மேக், தனது அனுபவங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். இதனால் இவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மொத்தமாக 6 மாத காலத்தில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். சுவாரஸ்யமாக தனது 17 வது பிறந்தநாளை அவர் அந்த குட்டி விமானத்திலேயே கொண்டாடியிருக்கிறார்.

Mack Rutherford becomes youngest pilot to fly solo around the world

முந்தைய சாதனை

முன்னதாக டிராவிஸ் லுட்லோ என்னும் இளம் விமானி கடந்த 2021 ஆம் ஆண்டு 24,900 மைல்கள் பயணம் செய்திருந்தார். அப்போது அவருடைய வயது 18 வருடங்கள் மற்றும் 150 நாட்கள் ஆகும். இந்நிலையில், இந்த சாதனையை 17 வருடங்கள் மற்றும் 64 நாட்கள் வயதில் முறியடித்திருக்கிறார் மேக். இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

Also Read | குழந்தைகளுக்கு பரவும் 'தக்காளி காய்ச்சல்'.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவசர அட்வைஸ்.. முழுவிபரம்..!

Tags : #ENGLAND #PILOT #YOUNGEST PILOT #MACK RUTHERFORD BECOMES YOUNGEST PILOT #GUINNESS WORLD RECORD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mack Rutherford becomes youngest pilot to fly solo around the world | World News.