பொதுவாக, அனைத்து நாளிலும் காலை எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கத்தினை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
Also Read | மணமகள் தேவை.. முழு பயோ டேட்டாவுடன் போஸ்டர் அடிச்சு ஒட்டிய இளைஞர்.. வியந்துபோன மக்கள்..!
அது மட்டுமில்லாமல், நாள் ஒன்றிற்கு இரண்டு அல்லது மூன்று வேளை வரை டீ குடிக்கவும் செய்து வருகின்றனர்.
அப்படி அனைத்து நாட்களிலும், மக்கள் மத்தியில் மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் டீ உருவாக்க தேவைப்படும் தேயிலை, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏலம் போன தேயிலை
அஸ்ஸாம் மாநிலத்தில் உருவாக்கப்படும் தேயிலை, உலகளவில் பிரபலமான ஒன்றாகும். அங்கிருந்து, ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. அஸ்ஸாம் பகுதியில் விளையும் பபோஜன் இயற்கை தேயிலை, மிக அரிய வகை மற்றும் நிறைய அபூர்வமான குணங்கள் கொண்டதாகும். மக்கள் மத்தியில் அதிக மவுசு உள்ள பபோஜன் தேயிலை, ஜோர்கட் தேயிலை ஏலம் விடும் மையத்தில், ஏலத்திற்கு வந்துள்ளது.
பபோஜன் இயற்கை தேயிலை
அப்போது, ஒரு கிலோ பபோஜன் இயற்கை தேயிலை, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தேயிலை நிறுவனம் ஒன்று தான், விலை கொடுத்து வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேயிலை, பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது தொடர்பாக, பபோஜன் இயற்கை தேயிலை எஸ்டேட் ஓனர் பேசுகையில், "இந்த அரிய வகை தேயிலையை நாங்கள் ஒரு கிலோ மட்டும் தான் உற்பத்தி செய்தோம். மேலும், இப்படி ஒரு விலைக்கு ஏலம் போனது மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதால், நிச்சயம் அஸ்ஸாம் தேயிலை தொழில் மீண்டும் புத்துயிர் பெற உதவும்" என தெரிவித்துள்ளார்.
Also Read | செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!