'ஆனாலும் எங்களுக்கு நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன்'.. 'அதனால'.. 'நாசாவின் புதிய அறிவிப்பு!' .. வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Sep 08, 2019 11:25 AM

சந்திரயான் 2 மிஷனில் இஸ்ரோவின் கடுமையான முயற்சி தங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவே இருந்ததாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ISROs attempt to land on moon has inspired, says NASA

இதுபற்றி தமது ட்விட்டரில், கூறியுள்ள நாசா,  ‘விண்வெளி ஆய்வு என்பது எப்போதுமே கடுமையான ஒன்று. நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் - 2 மிஷனுக்காக இஸ்ரோ மேற்கொண்ட தீவிர முயற்சி எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சூரியனைப் பற்றி ஆய்வினைச் செய்வதற்கான திட்டங்களில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

மேலும், விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென் துருவத்துக்கு சில கிலோ மீட்டர் அருகில் வரை நெருங்கியதை சுட்டிக் காட்டி ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவை பாராட்டியுள்ளதும், இஸ்ரோவுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐக்கிய அரபு அமீரக விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #NASA #ISRO #CHANDRAYAAN2 #INSPIRATIONAL