"அவரு 'இறந்து' போய்ட்டாரு..." 'மருத்துவர்' சொன்ன அடுத்த '45' நிமிடத்தில் காத்திருந்த மிகப் பெரிய 'ட்விஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் மவுண்ட் ரெயினியெர் தேசிய பூங்காவில் மைக்கேல் நபின்ஸ்கி (வயது 45) என்ற மலை ஏறும் நபர் கடும் குளிர் நிலையில் தொலைந்து போயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தேடுதலுக்கு பின் அவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டிலில் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு இதயத் துடிப்பு இருந்த நிலையில், பின்னர் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இறந்ததாக அறிவிக்கப்பட்ட மைக்கேலுக்கு மருத்துவக் குழுவினர் சிபிஆர் சிகிச்சை வழங்கினர். இந்நிலையில், சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமடைந்தனர். இதன் பின்னர், சுமார் 2 தினங்களுக்கு பிறகு மைக்கேல் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார்.
இன்னும் முழுமையாக மைக்கேல் குணமடையாத நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாகி இருந்த மைக்கேல், அதிலிருந்து மீண்டு வந்து பின்னர் மலையேறித் தொடங்கியதாக அவரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
