IPL2020: மொத்த அணியையும் மீட்டெடுக்க முயன்ற ஸ்டாய்னிஸ்!.. புரட்டிப்போட்ட அந்த ஒரு விக்கெட்!.. தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய பிரெட் லீ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ்க்கு எதிரான போட்டியில் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹைதராபாத் அணி வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜனை பிரெட் லீ பாராட்டியுள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில், “ஒரு இன்னிங்ஸின் இறுதியில் எப்படி சிறப்பாக பந்து வீச வேண்டும் என்றால் இப்படித்தான்” என்று குறிப்பிட்டு, “மிகச் சிறப்பான பந்துவீச்சு நடராஜன்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.
இதில் 162 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 163 ரன்கள் என்கிற இலக்கை முன்வைத்து விரட்ட தொடங்கிய டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி அணியின் ஸ்பின்னரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சரிந்து கொண்டிருந்த டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு மீட்டெடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அந்த சமயத்தில்தான் தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் டெலிவரியில் எல்பிடபிள்யூ முறையில் 11 ரன்களில் மார்க்கஸ் அவுட்டாகி களத்தில் இருந்து வெளியேறினார். ரிவ்யூ போனபோதும் அவருடைய விக்கெட் உறுதியானது. மார்க்கஸ் மட்டுமின்றி டெல்லி அணியையும் அவருடைய விக்கெட் ஏமாற்றத்தில் தள்ளியது.
இதனால் 20 ஓவர் முடிவில் 147 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்து சுருண்டது. 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.