3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Oct 14, 2019 10:28 AM

இந்தியாவைப் பொறுத்தவரையில் உணவுச்சந்தைக்கு என ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இதனால் நாளுக்குநாள் உணவு தொடர்பான தொழில்களில் பிரபல நிறுவனங்கள் பலவும் களமிறங்கி வருகின்றன. குறிப்பாக புட் டெலிவரி சந்தை தினந்தோறும் விரிவடைந்து கொண்டே வருகிறது.

Amazon’s Food Delivery Launching This Diwali? Details Here!

இந்தியளவில் ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவை உணவு டெலிவரியில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. ஸ்விக்கி முதலிடத்திலும், சொமாட்டோ 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை உபேர் ஈட்ஸ், புட் பாண்டா ஆகியவை பிடித்துள்ளன.

இந்தநிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள அமேசான் நிறுவனம் புட் டெலிவரியில் வரும் தீபாவளி முதல் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3500 கோடிகளுடன் களமிறங்கும் அமேசான் இதற்காக ரெஸ்ட்டாரெண்ட்களிடம் 25% கமிஷன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம்.

ஸ்விக்கி, சொமாட்டோ 20% மட்டுமே ரெஸ்ட்டாரெண்ட்களிடம் இருந்து கமிஷனாக பெறுகின்றன. ஆனால் சூப்பர் பாஸ்ட் டெலிவரி, மிகச்சிறந்த நெட்வொர்க் ஆகியவற்றை கொண்டுள்ளதால் அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்களிடம் இருக்கும் முன்கணிப்பு தொழில்நுட்பத்தையும், தற்போது இருக்கும் விநியோக முகவர்களையும் அமேசான் பயன்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்கச்சக்க சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட இந்த 3500 கோடியை அமேசான் பயன்படுத்த உள்ளதாம்.

Tags : #AMAZON #SWIGGY #ZOMATO