‘அரசக் குடும்பத்தை சேர்ந்த ஆள் இல்ல’... ‘ஆனாலும், நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்த காதலர்கள்’... ‘கடைசியில் கிடைத்த கிரீன் சிக்னல்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 01, 2020 12:33 PM

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளின் காதல் திருமணத்துக்கு பட்டத்து இளவரசர் அகிஷினோ தற்போது சம்மதம் தெரிவித்துள்ளதால், காதலர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Japan\'s crown prince \'approves\' daughter\'s wedding

ஜப்பானின் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரரும், பட்டத்து இளவரசர் அகிஷினோ. இவரின் மூத்த மகள் மாகோ (வயது29). ஜப்பானின் இளவரசியான இவர் அரச குடும்பத்தை சாராத, தனது பல்கலைக்கழக நண்பரான கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்ள போவதாக, கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார். இந்த திருமணம் நடந்தால் மாகோ தனது அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற போதும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது காதலரை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஏனெனில் ஆண் நண்பர் கெய் கொமுரோவின் குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், அவரது தாயார் தனது முன்னாள் கணவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததாலும் இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

மேலும் ஜப்பான் நாட்டு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திருமணம்  செய்துவைக்க போவதாக பட்டத்து இளவரசர் அகிஷினோ கூறியிருந்தார். இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறாமலேயே, சட்ட மேற்படிப்பு படிக்க, கெய் கொமுரோ நியூயார்க் சென்றுவிட்டார். இருவேறு இடங்களில் வசித்தாலும், காதலர்கள் இருவரும் தங்களது காதலை தொலைவிலேயே வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட, தனது மகளின் திருமணத்துக்கு பட்டத்து இளவரசர் அகிஷினோ தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “திருமணம் என்பது இரு பாலினத்தின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதனால், அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் ஒரு பெற்றோராக அது நான் மதிக்க வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சம்மதம் தெரிவித்தாலும்,  மாகோ-கெய் கொமுரோவின் திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் அரசக் குடும்பத்தை சாராத ஒருவர் என்பதால், அரச முறைப்படி திருமணம் நடைபெறுவதற்கான சிக்கல் உள்ளதாலும், கெய் கொமுரோவின் தாயார் நிதி நெருக்கடி சரிசெய்தப் பின்னரே திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan's crown prince 'approves' daughter's wedding | World News.