காதலருடன் சென்ற மனைவி.. கடலில் விழுந்ததாக நினைத்து ஹெலிகாப்டரை வைத்து தேடிய கணவர்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Jul 29, 2022 08:40 PM

ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் புதிதாக திருமணமான கணவர் ஒருவர் மனைவியுடன் கடற்கரை சென்று இருக்கிறார்.

Vizag Husband searched wife in sea using helicopter

Also Read | "அந்த 7 மணி நேரத்த வாழ்க்கை'ல மறக்க மாட்டேன்.. " பயங்கரமான இரவு.. பீதியில் உறைந்த இளைஞர்!!..

அப்போது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட, பயந்து போன கணவர் மனைவி கடலுக்குள் சென்று விட்டதாக நினைத்து 1 கோடி ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வைத்து மனைவியை தேடியுள்ளதாக கூறப்படும் சம்பவம் இந்தியாவில் வைரலாகி இருக்கிறது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் திருமணம் ஆகி, 1 வருடம் ஆகிறது. இதனடையில் கணவன் மனைவி சகிதமாக தம்பதியர் இருவரும் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று இருக்கின்றனர். அப்போது கடற்கரையில் இருந்த சீனிவாசனுக்கு ஏதோ செல்போன் அழைப்பு வந்துவிட, போன் பேசிக் கொண்டே நகர்ந்து சென்றிருக்கிறார். அப்போது அவருடைய மனைவி சாய்பிரியா அங்கிருந்து சென்று விட்டார்.

Vizag Husband searched wife in sea using helicopter

திரும்பி வந்து பார்த்த சீனிவாசனுக்கு அதிர்ச்சி, காரணம் இருந்த இடத்தில் இருந்து மனைவியை காணவில்லை. உடனே மனைவி கடலில் விழுந்திருக்கலாம் என்று பயந்துவிட்ட சீனிவாசன், திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தன்னுடைய மனைவியை காணாமல் பதறி இருக்கிறார்.

உடனே காவல்துறைக்கு புகார் அளித்ததுடன் கடலோர காவல் படையின் உதவியுடன் ஹெலிகாப்டரை வரவழைத்து சாய்பிரியாவை தேடி இருக்கிறார். இப்படி மனைவியை தேடுவதற்கு அவர் 1 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதனிடையே சீனிவாசனுக்கு அவருடைய உறவினர் மூலம் வந்த தொலைபேசி அழைப்பில் சாய்பிரியா ஆந்திராவின் நெல்லூரில் தம் காதலருடன் இருப்பது தெரியவந்துள்ளாது.

Vizag Husband searched wife in sea using helicopter

அதன் பின் அவரை போலீஸார் விசாரித்தபோது, சாய் பிரியா ஏற்கனவே காதலித்து வந்த ரவி என்பவரிடம் திருமணத்திற்கு பிறகும் பழகி வந்ததாகவும்,  அந்த ரவி என்பவருடன் சாய் பிரியா, நெல்லூர் சென்று விட்டதாகவும் தெரியவந்தது. முன்னாள் காதலருடன் போன மனைவியை கடலில் விழுந்துவிட்டதாக நினைத்து ஹெலிகாப்டரை வைத்து தேடிய கணவரது செயல் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | பையன் இல்லாம தனியா கல்யாணம் பண்ணி வைரலான பெண்.. "அடுத்த கட்ட பிளானுக்கும் இப்போ அவங்க ரெடி.."

Tags : #VIZAGPATINAM HUSBAND #HUSBAND SEARCHED WIFE USING HELICOPTER

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vizag Husband searched wife in sea using helicopter | India News.