லஞ்சம் அதிகமாக இருக்கும் நாடுகள் எவை..? இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்..? வெளியான பட்டியல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் லஞ்சம் அதிகமாக வாங்கும் நாடுகளின் பட்டியலை லஞ்ச ஒழிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில், உலகளவில் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பீடு செய்து பட்டியலிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தரவுகளின்படி வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் லஞ்சம் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சற்று நல்ல நிலையில் உள்ளது. இதில் பூடான் 37 புள்ளிகளுடன் 48-வது இடத்தில் இருக்கிறது. சீனா, தனது அதிகாரத்தை தொடர்ந்து ஒழுங்குபடுத்துவதின் மூலம் அரசு அதிகாரிகளின் லஞ்ச வாய்ப்புகள் குறைத்துள்ளதாக டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
