‘பதற்றமானவர், தேர்ச்சி பெற ஆர்வம் இல்லை’... ‘ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து’... ‘தனது புதிய புத்தகத்தில் எழுதியுள்ள’... ‘முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது புதிய புத்தகம் ஒன்றில் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ (‘A Promised Land’) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்த விமர்சனம் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை விவரிக்கும் வகையிலான 768 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் வரும் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த புத்தகத்தில், தான் அதிபராக இருந்தபோது சந்தித்த சர்வதேச தலைவர்கள் குறித்து ஒபாமா எழுதியுள்ளார். அதன்படி, இந்திய பயணத்தின்போது சந்தித்த, ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் குறித்தும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஒபாமாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நியூயார்க டைம்ஸ் மன்மோகன் சிங் பற்றி கூறி இருப்பதாவது, ‘அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரும் எளிதாக எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத தன்மையில், ஒற்றுமை இருப்பதைக் கண்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி பற்றி கூறுகையில், ‘பதற்றமானவர், அறியப்படாத, கணிக்க முடியாத குணம் கொண்டவர்.
ஆசிரியரை ஈர்க்க நினைக்கும் மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்தாலும், திறமை படைத்தவராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய ஆர்வம் இல்லாதவராகவே இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்த புத்தகத்தில் ரஷ்ய அதிபர் புதின், ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குறித்து அவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அப்போது காங்கிரசின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி, ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார். அதில் ‘அவரை மீண்டும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அதிபர் பாரக் ஒபாமா கிரேட் உடன் ஒரு அருமையான அரட்டை இருந்தது’ என ராகுல் காந்தி ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.