'சின்ன வயசுல ராமாயணம், மகாபாரதம் கதைகள கேட்டு வளர்ந்தேன்...' இந்தியாவ ரொம்ப பிடிக்க காரணமே 'அவரு' தான்...! - ஒபாமா நெகிழ்ச்சி...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகளைக் கேட்டு தனது குழந்தை பருவம் அமைந்ததால், எப்போதும் இந்தியா என் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

'ஏ பிராமிஸ்டு லேண்டு' என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலில், 2010-ம் ஆண்டில் அதிபராகி வருகை தந்ததற்கு முன்னர் தான் ஒருபோதும் இந்தியாவுக்கு வந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'இந்தியா எனது கற்பனையில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருந்தது. அதற்கு காரணம், குழந்தைப் பருவத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை படித்ததற்கு, கிழக்கு மதங்களில் எனக்குள்ள ஆர்வம் காரணமாகவோ அல்லது பாகிஸ்தான் மற்றும் இந்திய கல்லூரி நண்பர்கள் காரணமாகவோ இருக்கலாம். இதுதான் பருப்பு மற்றும் கீமாவை சமைக்க எனக்கு கற்றுக் கொடுக்கவும் செய்தது.
மேலும் மகாத்மா காந்தியால் தான் இந்தியா மீது தனக்கு அதிக ஈர்ப்பு வந்ததாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அகிம்சைப் போராட்டத்தைக் கையாண்ட அவர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்ததார்' என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
