“நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா, நான் எப்படி அந்த காரியத்தை செய்வேன் என உக்ரைன் அதிபர் உருக்கமாக கூறியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றிருக்கும் ‘நேட்டோ’ என்ற அமைப்பில் சேர உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகிறது.
இதனை அடுத்து உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்தில் போரில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிலிருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது. உகரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையைப் பகுதியை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்தது.
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த ஜெலன்ஸ்கி, ‘நான் உக்ரைனின் அதிபராகவும், 2 குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கிறேன். எங்களது நாட்டில் அழிவை கொடுக்கும் வகையிலான ரசாயனம், உயிரி ஆயுதங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இது உலகிற்கு நன்றாக தெரியும், உங்களுக்கும் தெரியும். இதுபோல் எங்களுக்கு எதிராக ரஷ்யா ஏதாவது செய்தால் அது மிகக் கடுமையான பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்கும்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.