“ஹனிமூனில் கால் டாக்ஸி டிரைவரை விட்டு மனைவியைக் கொன்ற கணவர்!”.. ‘சிறையில் இருக்கும் டிரைவர்’.. பரோல் விஷயத்தில் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த வருடம் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வைத்து பிரிட்டனைச் சேர்ந்த ஸ்ரியன் தேவானி என்கிற கோடீஸ்வரனின் மனைவி அன்னி தேவானி கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரியன் மற்றும் அன்னி தேவானி தம்பதி தேனிலவு கொண்டாட போன போது அன்னி தேவானி கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், வாடகை டாக்ஸி டிரைவர் சோலா டோங்கோ என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரின் கொலைத்திட்டத்துக்கு பின்னால் ஸ்ரியம் தேவானி இருந்தது தெரியவந்தது.
ஆனாலும் சோலா டோங்கோ விசாரணையின் போது சரிவர பதில் சொல்லாமல் பல தகவல்களை மறைத்ததால், ஸ்ரியன் தேவானிதான் தன் மனைவியை திட்டமிட்டு, வாடகை கொலைகாரராக சோலா டோங்கோவை நியமித்து கொலை செய்ததற்கு போதிய ஆதாங்கள் இல்லாமல் போய்விட்டது. இதனால் அவரை விசாரிப்பதை நிறுத்திய நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரியன் தேவானி குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் சோலா டோங்கோவின் நன்னடத்தை காரணமாக அவர் பரோலில் விடப்படுவதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் அதற்குள் முந்திக்கொண்ட அன்னி தேவானியின் தந்தை வினோத் ஹிந்தோச்சா மற்றும் தாய் மாமா அசோக் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சோலா டோங்கோவின் விடுதலையை ரத்து செய்ய வைத்துள்ளனர். இதனிடையே தான் சொன்னதை செய்த சோலா டோங்கோவை விடுவிக்க, ஸ்ரியன் தேவானி முயற்சித்ததாகவும், இப்போது அந்த முயற்சி தோல்வியில் அடைந்ததாகவும் அன்னி தேவானியின் தரப்பில் கூறியுள்ளனர்.