"சுவத்துக்குள்ள இருந்து தான் சத்தம் வருது"..பூஜை அறைக்குள்ள வந்த விருந்தாளி.. பதறிப்போன குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்காவில் ஒரு குடும்பத்தினரின் பூஜை அறையில் புகுந்த மிகவும் கொடிய விஷமுள்ள பாம்பை விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் பிடித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் நிக் இவான்ஸ். விலங்குகள் பயிற்றுவிப்பாளரும் விலங்குகள் நல ஆர்வலருமான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு போன்கால் வந்திருக்கிறது. எதிர்தரப்பில் பேசியவர் படபடப்புடன் தனது வீட்டின் பூஜை அறைக்குள் பாம்பு இருப்பதாகவும் உடனடியாக உதவி தேவை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மலைப்பாங்கான இடத்தில் இருந்த அவ்வீட்டிற்கு விரைந்து சென்றிருக்கிறார் நிக்.
சுவற்றில் இருந்து கேட்ட சத்தம்
வீட்டின் உள்ளே அமைந்திருந்த பூஜை அறையில் பாம்பு இருப்பதாக வீட்டினர் கூறவே, தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி உள்ளே நுழைந்திருக்கிறார் நிக். அப்போது சுவற்றில் இருந்து வினோத சத்தம் வருவதை கண்டுபிடித்த அவர், சுவரில் இருந்த துளையை பார்த்திருக்கிறார். அதனுள் செல்போன் வெளிச்சத்தில் நிக் பார்த்த போது உண்மையிலேயே தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்திருக்கிறார் நிக்.
காரணம் அந்த துளையின் உள்ளே இருந்தது கொடிய விஷம் கொண்ட மொசாம்பிக் பாம்பு. ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த பாம்புகள் பல அடி நீளம் வளரக்கூடியவை என்றும் ஆபத்தானவை எனவும் கூறுகிறார் நிக்.
மீட்பு
இதனையடுத்து, துளை வழியாக பாம்பை வெளியே எடுக்க நிக், முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் வீட்டாரிடம் அனுமதி பெற்று, சுவற்றின் ஒரு பகுதியை இடித்து, உள்ளே இருந்த பாம்பை வெளியே எடுத்திருக்கிறார் நிக்.
இதுபற்றி நிக் பேசுகையில்," பாம்பை வெளியே எடுக்கும் போது, அது அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டே இருந்தது. மேலும், மூர்க்கமாக சத்தம் எழுப்பியது. சுவரின் ஒரு பகுதியை உடைத்து ஒருவழியாக பாம்பை வெளியே எடுத்தேன். அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்" என்றார்.
வீட்டின் பூஜை அறையில் மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் குறித்து நிக் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8