"ட்விட்டர்ல எனக்கு ப்ளூடிக் வேணும்"..கோர்ட்டுக்கு போன முன்னாள் CBI அதிகாரி.. பொசுக்குன்னு நீதிபதி கேட்ட கேள்வி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ப்ளூடிக் தனக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
ப்ளூடிக்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தனது பயனர்களில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த ப்ளூடிக்கை வழங்கிவருகிறது. ஒருவருடைய கணக்கு அதிகாரப்பூர்வமானது என்று நிரூபிக்கும் வகையில் ப்ளூடிக்கை அளிக்கிறது ட்விட்டர் நிறுவனம். இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனருமான நாகேஸ்வர ராவ் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்ட ப்ளூடிக்கை மீண்டும் பெற வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது ட்விட்டர்பக்கத்தில் இருந்த ப்ளூடிக் கடந்த 2022 மார்ச் மாதம் நீக்கப்பட்டதாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
விசாரணை
கடந்த 7 ஆம் தேதி நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ட்விட்டர் நிறுவனத்திடம் ப்ளூடிக் கோரி மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்திருந்தார் நீதிபதி. இந்நிலையில் மீண்டும் தனக்கு ட்விட்டர் பக்கத்தில் ப்ளூடிக் வேண்டும் என மனு அளித்திருந்தார் ராவ்.
இந்த மனுவை மீண்டும் நேற்று விசாரித்த நீதிபதி,"கடந்த 7 ஆம் தேதியே உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளோம். அதற்குள்ளாக மீண்டும் ஏன் மனு அளித்திருக்கிறீர்கள். உங்களுக்கு அதிக நேரம் இருப்பது போல தெரிகிறது. எங்களிடம் இருந்து பரிசு எதுவும் வேண்டுமா?" எனக் கேட்டார்.
அபராதம்
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூடிக் வேண்டும் என மீண்டும் நீதிமன்றத்தை அணுகிய அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். நாகஸ்வர ராவ் அளித்திருந்த மனுவில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துபவர்களின் குறைகள் அல்லது புகார்களைக் கையாள குறைதீர்க்கும் கமிட்டியை அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8