அடுத்த 4 மாசத்துக்கு NIGHT தான்.. சூரியனயே பார்க்க முடியாது.. பூமியில இப்படி ஒரு இடமா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | May 17, 2022 01:45 PM

உலகின் மிக நீண்ட இரவுக்கு தயாராகிவிட்டனர் அண்டார்டிகா கண்டத்தில் ஆய்வில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள்.

Antarctica Goes Dark As The Sun Sets For 4 Months

Also Read | மசூதிக்குள் இருந்த சிவலிங்கம்..?.. நீதிமன்றம் போட்ட பிறப்பித்த உத்தரவு.. உச்சகட்ட பரபரப்பில் வாரணாசி!

அண்டார்டிகா

உலகின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகாவில் முழுவதும் பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன. பூமியின் நன்னீர் அளவில் கணிசமானவை இந்த கண்டத்தில் பனிக்கட்டியாக உறைந்திருக்கின்றன. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வு குழுவினர் தங்களது ஆய்வு கூடங்களை அமைத்துள்ளனர். இந்நிலையில் அடுத்த நான்கு மாத காலத்திற்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சமீப காலமாக சேகரித்துவந்தனர் இந்த ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் அடுத்த சில மாதங்களுக்கு அண்டார்டிகாவில் வெறும் இருட்டு மட்டும் தான் இருக்கும்.

Antarctica Goes Dark As The Sun Sets For 4 Months

உலகின் நீண்ட இரவு

இந்த மாதங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் பூமிப் பகுதிக்கு எதிர்ப்புறத்தில் அண்டார்டிக்கா அமைந்திருப்பதால் அங்கே இருட்டாகவே இருக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அளித்த தகவலின்படி பூமியின் தென் துருவத்தில் சூரியன் தினந்தோறும் உதித்து மறையாது. ஒரு முறை உதித்தால், அடுத்த சில மாதங்களுக்குப் பிறகுதான் மறையும்.

ஆகஸ்டு மாதம் உதிக்கத் தொடங்கினால் அக்டோபர் வரை சூரிய உதயம் நிகழும். பின்னர் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சூரிய ஒளி இருக்கும். பின்னர் மார்ச் முதல் மே மாதம் வரை சூரிய அஸ்தமனம் நிகழும் என்கிறது நாசா. அதன்படி கடந்த 4 ஆம் தேதி சூரிய அஸ்தமனம் நிகழ்ந்திருப்பதாகவும் அடுத்த சில மாதங்களுக்கு அண்டார்டிகாவில் சூரியன் உதிக்காது எனவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது.

Antarctica Goes Dark As The Sun Sets For 4 Months

ஆராய்ச்சி

இந்த காலங்களில் அண்டார்டிகாவில் நிலவும் இருள் சூழ்ந்த சூழ்நிலை காரணமாக, விமான பயணம் சாத்தியமில்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதன் காரணமாக, அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அண்டார்டிகாவின் மிக உயரமான பகுதியில் இத்தாலி - பிரான்ஸ் கூட்டு ஆய்வு மையமான கான்கார்டியா அமைந்துள்ளது.

Antarctica Goes Dark As The Sun Sets For 4 Months

இங்கே, உட்சபட்ச குளிரில் மனிதர்களின் உடல்நிலை எவ்வாறு இயங்குகிறது என்பதை இந்த குழுக்கள் ஆய்வுசெய்ய இருக்கின்றன. பொதுவாக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், பல மாதங்களுக்கு தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி அண்டார்டிகாவில் ஆய்வில் ஈடுபட்டுவரும் இந்த ஆராய்ச்சியாளர்களும் தங்களுக்கான பொருட்களை சேகரித்துவந்த நிலையில் தற்போது தங்களது ஆய்வுகளைத் துவங்கியுள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Tags : #ANTARCTICA #ANTARCTICA GOES DARK #SUN SETS #அண்டார்டிகா

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Antarctica Goes Dark As The Sun Sets For 4 Months | World News.