'எதைப்பற்றியும் கவலையில்லை...' "நீ ரோட்ட போடு மாப்ள..." "இனி வர்ரத பார்துக்கலாம்..." 'உள்கட்டமைப்புகளை' மேம்படுத்தும் 'பணியில்...' '10 ஆயிரம் வீரர்கள்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாலடாக்கில், கல்வான் பகுதியில் சீன வீரர்கள் தாக்கியதையடுத்து, சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எல்லைப்பகுதியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த பணியில் ஜார்க்கண்டை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாங்காங் சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டத்திற்கும், தர்புக் - ஷயோக் - தவுலட் பெக் சாலையை இணைக்கும் திட்டத்திற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், சீனாவின் அழுத்தத்தை கண்டு , லடாக்கின் கிழக்கு பகுதியில் திட்டங்களை நிறுத்துவது இல்லை என இந்தியா ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
இதற்காக, கடந்த மே 22ம் தேதி, மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில், ரயில்வே துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், நாட்டின் எல்லை பகுதியில் சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஜார்க்கண்டில் இருந்து காஷ்மீர், லடாக் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 11,800 தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தது. அதில், லடாக்கில் நடக்கும் பணிகளுக்கு, 8 ஆயிரம் பேர் தேவை என பிஆர்ஓ கூறியிருந்தது. எஞ்சியவர்கள், மற்ற மாநிலங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
உதம்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், பிஆர்ஓ ஏற்பாட்டின்படி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வந்துள்ளனர். கடந்த 10 நாளுக்கு முன்பு கடைசியாக வந்த ரயிலில் 1,600 பேர் வந்தனர்.
ஜார்க்கண்ட்டின் சாந்தல் பர்கனாவை சேர்ந்தவர்கள், எல்லையில் சாலை அமைக்கும் பணிகளில் 1970 ம் ஆண்டு முதல் முன்னணியில் இருந்து பணியாற்றி வருகின்றனர். எல்லைப்பகுதியில் உள்கட்டமைப்பு அடிப்படையில் நம்மை விட சீனா முன்னால் உள்ளது என்றாலும் இனி வரும் காலங்களில் அதுமாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.