'நவம்பர் 2-ஆம் தேதி ஆஸ்ட்ரோசென்கா தடுப்பூசி ரெடி...' 'ஹாஸ்பிட்டல்ல வந்து போடலாம்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மருத்துவமனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட பிரிட்டனில் வரும் நவம்பர் மாதம் முதல் வைரஸிற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஆஸ்ட்ரோசென்கா அடுத்த மாதம் பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது. இந்த முதல் கட்ட மருந்துகள் நவம்பர் 2 ஆம்தேதி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டனில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசிவருவதால் அந்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அங்கு கொரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44,000 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
