"'டாக்டர்',, பையன் திடீர்னு தூங்கி விழுறான்", "என்னன்னு கொஞ்சம் பாருங்க"... பையன் 'ஸ்கேன்' ரிப்போர்ட் பாத்து... 'ஒரு' நிமிஷம் அரண்டு நின்ற 'மருத்துவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பாலஸ்தீன் பகுதியில் திடீரென தனக்கு தூக்கம் வருவதாக ஒன்பது வயது சிறுவன் கூறிய போது, அவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம், சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில் அதில் குண்டு ஒன்று பாய்ந்திருப்பதைக் கண்டு மருத்துவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மிரண்டு போயினர். சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த போதும், மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்த போது அவன் சுயநினைவுடன் எப்போதும் போல தான் இருந்துள்ளான்.
உடனடியாக, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த குண்டை தலையில் இருந்து அகற்றினர். தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ள நிலையில், குண்டு வேறொரு கோணத்தில் சிறுவனின் தலையில் பாய்ந்திருந்தால், மூளைக்கு அதிகம் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அதே போல, நரம்பு மண்டல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிறுவன் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்ற மருத்துவர்கள் கருதுகின்றனர்.