முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த டிஜிட்டல் யுகத்தில், அனைவரின் கைகளிலும், மொபைல் ஃபோன்கள் இருப்பதால், சமூக வலைத்தளத்திலும் பலர் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த சோசியல் மீடியா மூலம் ஏராளமான மோசடி வேலைகள் நடைபெறுவது தொடர்பான செய்திகளும் நம் அறியாமல் இல்லை.
அப்படி ஒரு மோசடியில், 43 வயது நபர் ஒருவர் சிக்கியுள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பகுதியைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரிலுள்ள தகவலின் படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காலை 10 மணி அளவில் பேஸ்புக் மூலம் Request ஒன்று அந்த நபருக்கு வந்துள்ளது. அங்கித் சர்மா என்ற அந்த பெண் பெயரில், Request வந்ததாக கூறப்படும் நிலையில், கொஞ்ச நேரத்தில் மெசேஜூம் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்ணுடன் அந்த நபரும் உரையாடிய நிலையில், அடுத்த கொஞ்ச நேரத்தில் வீடியோ கால் செய்யவும் ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது, எதிரே வந்த பெண் ஒருவர், ஆடைகளை கழற்ற ஆரம்பித்ததன் காரணமாக அந்த அழைப்பை துண்டித்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அவர் ஏற்கனவே வாட்ஸ்அப் நம்பரை பகிர்ந்ததாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் எண்ணிலும் வீடியோ கால் வந்ததாக தெரிகிறது. அதிலும், அந்த பெண் ஆடைகளை கழற்ற தொடங்கியதாக புகார்தாரர் குறிப்பிட்டுள்ள நிலையில், ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக கருதி, உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளார். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட facebook அக்கௌன்ட் மற்றும் மொபைல் எண்ணையும் பிளாக் செய்து உள்ளார்.
இப்படி நடந்த மறுதினமே, அந்த வீடியோ கிளிப்பை ஒருவர் அனுப்பி வைத்து, தன்னை சைபர் கிரைம் போலீஸ் என்றும் அறிமுகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.அந்த பெண் ஆடையை கழற்றி நின்ற வீடியோ வைரலானதன் காரணமாக, உயிரிழந்து போனதாகவும், மேலும் இந்த வீடியோ டெலிட் செய்ய வேண்டும் என்றால் 2.5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை நம்பி, அந்த நபரும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
மீண்டும் போலீஸ் என பேசிய நபர் அழைத்து, பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி, 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இதனையும் நம்பிய அந்த நபர், எப்படியோ பணத்தை தயார் செய்து அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் மீண்டும் பணத்திற்காக அழைப்பு வந்துள்ளது.
இதனால், சந்தேகம் அடைந்து சுதாரித்து கொண்ட அந்த நபர் தற்போது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் மும்பை பகுதியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
