அன்லிமிட்டட் சாப்பாடு.. அதுவும் இந்த விலையில .. வயதான தம்பதியின் லட்சிய வாழ்க்கை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதி ஒன்று வெறும் 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் சாப்பாடை வழங்கிவருவது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Also Read | இனி இவங்கதான் உலகத்தின் அதிக வயதுடைய பெண்மணி.. கின்னஸ் நிர்வாகம் அறிவிப்பு..யார் இந்த சிஸ்டர் ஆன்ட்ரே?
என்னதான் மனிதகுலம் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளில் புதிய வாழ்க்கையை நோக்கி ஓடினாலும் உணவு எனும் ஒற்றை புள்ளியில் தண்ணீறைவு அடைவதையே முதன்மை இலக்காக கொண்டுள்ளது. ஹோட்டல்களில் விதவிதமாக சாப்பிட்டாலும் நமது பிரியத்திற்குரிய நபர்கள் கொடுக்கும் எளிமையான உணவு நம்முடைய மனதை நிறைய வைத்துவிடும். அப்படியான மகத்தான காரியத்தைத்தான் செய்து வருகிறது கர்நாடகாவைச் சேர்ந்த வயதான தம்பதி ஒன்று.
கர்நாடக மாநிலம், மணிப்பால் பகுதியில் ராஜகோபால் நகர் சாலையில் அமைந்துள்ளது கணேஷ் பிரசாத் ஹோட்டல். உணவகம் என்றவுடன் பரிமாறுபவர்கள், சமையலாளர்கள் ஆகியோர் இருப்பார்கள் என நினைக்கவேண்டாம். தங்களது கைகளில் வீட்டு முறைப்படி சமைத்த உணவுகளையே இந்த தம்பதி மக்களுக்கு வழங்கி வருகிறது.
வீட்டு உணவு
நாம் வழக்கமாக செல்லும் ஹோட்டல்கள் போல இது கிடையாது. இங்கே வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே மக்களுக்கு வழங்குகிறார்கள் இந்த தாத்தாவும் பாட்டியும். 1951 ஆம் ஆண்டு உணவகத் தொழிலில் கையிலெடுத்த இவர்கள் குறைந்த விலையில் மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே இவர்களுடைய இந்த ஹோட்டலில் இன்றும் 50 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டு, பொரியல், ஊறுகாய், அப்பளம், பாயாசம், பருப்பு, சாம்பார், ரசம் மற்றும் மோர் என பசியுடன் வரும் அனைவருக்கும் வயிறார உணவு அளிக்கிறார்கள் இந்த இத்தம்பதியினர். வீடு போலவே இருக்கும் இந்த வித்தியாசமான ஹோட்டலில் இந்த வயதான தம்பதி தங்களது வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து உணவை வழங்குகின்றனர். இதனாலேயே உள்ளூர் மக்கள் இதனை தாத்தா பாட்டி கடை என்று அன்போடு அழைக்கின்றனர்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை ரக்ஷித் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இந்த இடம் என்னை கலங்க வைத்துவிட்டது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு சரியான விலைக்கு இங்கே விற்கப்படுகிறது. உணவை தாண்டி இந்த வயதான தம்பதி காட்டும் அன்பு விலைமதிப்பில்லாதது. உங்களது தாத்தா பாட்டியின் அன்பை இங்கே உணரமுடியும். உணவை தாண்டி இங்கே அன்பும் சேர்ந்தே பரிமாறப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 50 ரூபாய்க்கு உணவு வழங்கும் வயதான தம்பதி குறித்த இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8