ஆஸ்கார் விருது விழாவில் வைரலாகும் தீபிகா படுகோனே-யின் புதிய டாட்டூ.. அதுக்கு இது தான் அர்த்தமா! வைரல் போட்டோஸ்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pichaimuthu M | Mar 13, 2023 11:40 AM

ஆஸ்கார் விருது விழாவில் நடிகை தீபிகா படுகோனேயின் டாட்டூ டிசைன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Deepika Padukone New Tattoo Design for Oscars 2023

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தியாவுக்கே பெருமை! OSCAR வென்ற RRR பாடல்.. விருது அறிவிக்கும் போது தீபிகா படுகோனேயின் வைரல் ரியாக்ஷன்.. VIDEO

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர்.

தீபிகா படுகோனே, 2007-இல் ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

Deepika Padukone New Tattoo Design for Oscars 2023

Images are subject to © copyright to their respective owners.

தீபிகா படுகோன் சமீபத்தில்  கெஹ்ரையான், 83, பதான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் தீபிகா படுகோனே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Deepika Padukone New Tattoo Design for Oscars 2023

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே, 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Deepika Padukone New Tattoo Design for Oscars 2023

பிரபலங்கள் எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருது வழங்குபவர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்க நேரப்படி 95வது ஆஸ்கார் விருதுகள் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 அன்றிரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

Deepika Padukone New Tattoo Design for Oscars 2023

Images are subject to © copyright to their respective owners.

இந்த விழாவில் தீபிகா படுகோனே புதிய டாட்டூ போட்டு கலந்து கொண்டார். ஆஸ்கார் பாரம்பரியப்படி கருப்பு நிற உடையில் வைர நகைகள் அணிந்து தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.  தீபிகா படுகோனே தனது காது மடலுக்கு கீழ் 82°E என டாட்டூ போட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. 82°E என்பது தீபிகா படுகோனே துவங்கி உள்ள அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். 82°E  என்பது இந்தியாவின் நிலையான நேரத்தை குறிப்பது.

Also Read | Naatu Naatu : ஆஸ்கார் விருது பெற்ற பின்.. MM கீரவாணி பாடிய பாடல்.. வீடியோ..!

Tags : #DEEPIKA PADUKONE #DEEPIKA PADUKONE NEW TATTOO DESIGN #OSCARS 2023

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Deepika Padukone New Tattoo Design for Oscars 2023 | World News.