‘சொல்லவே இல்ல?’.. ‘கொரோனாவ’ பத்தி நெனைச்சத.. அப்படியே தலைகீழாக ‘புரட்டிப் போடும் உலக சுகாதர அமைப்பின்’ அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொரோனா மின்னல் வேகத்தில் அதிகமாகி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொடங்கிய தொடக்க காலத்தில் இவ்வைரஸால் வயதானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் புதிய தகவல்படி இதுவரை பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் 25 முதல் 64 வயதுடையவர்களுக்கு பதிவாகி இருப்பதை காட்டுகிறது.
இதனால் இளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே கொரோனா பாதிப்பு விகிதம் 6 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மிகச் சிறிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு நோய்த்தொற்று பரவியதால் இளைஞர்களிடையே கொரோனா அதிகரித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர்தான் ஆபத்தான வகையில் கொரோனா அதிகரித்திருப்பதையும் குற்றம் சொல்ல வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.