'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...'
முகப்பு > செய்திகள் > உலகம்'அமெரிக்காவில் தற்போதுவரை, குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' என, அமெரிக்காவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
![Corona for 2 crore people in the US-Health Department Report Corona for 2 crore people in the US-Health Department Report](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/corona-for-2-crore-people-in-the-us-health-department-report.jpg)
அமெரிக்காவில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24.7 லட்சத்தைக் கடந்துள்ளது; 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு புதிய மதிப்பீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்' எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை அடைந்து வருவது கவலையளிக்கிறது.
'வரும் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.80 லட்சமாக அதிகரிக்க கூடும்' என, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 'ஒருவேளை 95 சதவீத அமெரிக்கர்கள் முகக்கவசங்களை அணியும் பட்சத்தில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை 1.46 லட்சமாக கட்டுப்படுத்த முடியும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள எண்ணிக்கையை விட 7 மடங்கு அதிகமாக அமெரிக்க சுகாதாரத்துறை அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)