‘இந்த மனுஷன் இங்கிலாந்தின் வொய்ட் பால் கிரிக்கெட்டையே மாத்திட்டார்’!.. ‘ஒரு பெஸ்ட் ரோல் மாடல்’.. பென் ஸ்டோக்ஸ் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 18, 2021 10:30 AM

இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை பாராட்டி பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Ben Stokes shares an emotional post on Eoin Morgan

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இதனை அடுத்து 5 போட்டிகள் டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

Ben Stokes shares an emotional post on Eoin Morgan

இதில் நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி இன்று (18.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ben Stokes shares an emotional post on Eoin Morgan

இந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் குறித்து அந்நாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த மனிதன் (இயன் மோர்கன்) இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை மாற்றியுள்ளார். ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு சிறந்த கேப்டன்’ என இயன் மோர்கனை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ben Stokes (@stokesy)

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ben Stokes shares an emotional post on Eoin Morgan | Sports News.