'இப்படியா எல்லாத்தையும் கோட்டை விடுறது???'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்?!!'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்ததுடன் அணியையும் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி அஜிங்கிய ரஹானே அனைவருடைய பாராட்டுகளையும் குவித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப்பின் ரஹானே பற்றி பேசியுள்ள மிட்செல் ஸ்டார்க், "ரஹானேவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்களுடைய முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்குக் குறைவாக இந்திய அணி ஸ்கோர் இருந்த போது ரஹானே கப்பலை சரியாக வழிநடத்திச் சென்றார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் தன் கையில் எடுத்துக் கொண்டார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பாக 4-5 முறை அவரை அவுட் ஆக்கியிருக்க வேண்டியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன.
அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது, நல்ல சதம் எடுத்தார். இது எங்களுக்கு சரியான நாளாக அமையவில்லை. சில வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அந்த அரை வாய்ப்புகளெல்லாம் தரைதட்டின. நாங்கள் நன்றாக ஆடினோம். ஆனால் அதன் பலனை எய்தவில்லை. எனக்கு சொந்த மைல்கல் மீது அதிக நாட்டமில்லை. 250 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சிதான், ஆனால் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்போதைய கவனம்" எனக் கூறியுள்ளார்.