திடீர்னு உருவான துளை.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அடுத்த வாரமே இப்படி ஆகிடுச்சே.. பதறிப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த வாரம் சிலி நாட்டில் உருவான மர்ம துளை இரண்டு மடங்கு பெரிதாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அந்த பகுதிக்குள் யாரும் செல்லவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

Also Read | "பணம் கொடுத்தாதான் Hospital-ல இடம்".. சாலையில் நடந்த பிரசவம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!
பிரம்மாண்ட துளை
தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள காப்பர் சுரங்கத்தில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி பிரம்மாண்ட துளை ஒன்று ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து சுமார் 665 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கத்தின் பணியாளர்களை அதிர வைத்திருக்கிறது இந்த ராட்சத துளை. காப்பர் சுரங்கத்தின் மையப்பகுதியில் சுமார் 82 அடி அகலத்துக்கு இந்த துளை உருவாகியிருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த அதிகாரிகள் இது எப்படி உருவானது? என்பது பற்றி அறிந்துகொள்ள முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து, புவியியல் மற்றும் சுரங்க நிபுணர் குழுக்கள் அந்த இடத்துக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டன. சுமார் 200 மீட்டர் ஆழம் இருக்கும் இந்த துளையின் ஆழத்தில் ஏதேனும் உலோகம் இருக்கிறதா? என்பது பற்றி அறிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அதற்குள் வெறும் நீர் மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த இடத்தை theCanadian Lundin எனும் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
2 மடங்கு
இந்நிலையில், இந்த பிரம்மாண்ட துளையின் அகலம் தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். தற்போது இந்த துளையின் அகலம் 160 அடியாக அதிகரித்திருக்கிறது. அதாவது சுமார் ஒருவார காலத்திற்குள் இந்த துளையின் விட்டம் இரண்டு மடங்கு பெரிதாகியுள்ளது. இது உள்ளூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இதனையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய புவியியல் மற்றும் சுரங்க சேவைகள் அலுவலகம் அளித்துள்ள பணியை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அவை என்ன பணி என்பது குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து ஊழியர்கள் துளைக்கு அருகே செல்ல விதிக்கப்பட்ட தடையை நீட்டித்திருக்கிறது அந்த நிறுவனம்.
அல்காபரோசா சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் பூமிக்கு அடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றியுள்ள நிலத்தை சீர்குலைத்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
