அக்கவுண்ட்டில் CREDIT ஆன சம்பளம்.. "ஆஹா, 3 ஜீரோ இருக்க வேண்டிய இடத்துல இத்தனை இருக்கே.." நைசாக ஊழியர் பாத்த வேலை

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 29, 2022 10:33 AM

பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த தொகையும், அதன் பின்னர் அந்த நபர் செய்த செயலும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

employee accidentally paid 286 times his salary and disappears

சிலி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து வழக்கம் போல மாதச் சம்பளம் வங்கி கணக்கில் கிரெடிட் ஆகி உள்ளது.

ஆனால், இந்திய மதிப்பில் சுமார் 43,000 ரூபாய் மட்டுமே அவரது கணக்கிற்கு வர வேண்டி இருந்த சூழலில், அதற்கு பதிலாக சுமார் 1.4 கோடி ரூபாய் தவறுதலாக அவரது அக்கவுண்டில் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவரது சம்பளம் 286 மடங்கு தவறுதலாக கணக்கில் ஏறி உள்ளது.

அக்கவுண்டில் வந்த பணம்..

இதனைக் கண்டதும் அந்த ஊழியர் தலைசுற்றி போகவே, உடனடியாக அந்த நிறுவனத்தின் மேலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு தவறுதலாக நடந்த கிரெடிட் குறித்தும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் சார்பில் அதை பரிசோதித்து பார்த்த போது, 286 தடவை அவரது மாதச் சம்பளம் தவறுதலாக அக்கவுண்டில் செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதிகமாக அக்கவுண்டில் ஏறிய பணத்தை மீண்டும் நிறுவனத்திற்கு செலுத்துமாறும் அவர்கள் அந்த ஊழியரிடம் தெரிவித்துள்ளனர்.

employee accidentally paid 286 times his salary and disappears

Representative Image

திருப்பி அனுப்பிடுங்க..

இதன் பின்னர், தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பித் தருவதாக அந்த ஊழியரும் உறுதியளித்துள்ளார். ஆனால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க அவருக்கு மனம் இல்லை என தெரிகிறது. அந்த நபரும் பணத்தை திருப்பி அனுப்பலாம் என உறுதி அளித்து பல நாட்கள் ஆகியும், நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் ஏதும் திருப்பி செலுத்தப்படவில்லை. தொடர்ந்து அந்த ஊழியரை தொடர்பு கொள்ளவும் நிறுவனம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் அதற்கு திருப்பி எந்த பதிலும் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆள் அதோட எஸ்கேப்..

பின்னர் நிறுவனத்தை அழைத்து பேசிய அந்த ஊழியர், தான் அதிகமாக தூங்கி விட்டதாகவும் இனிமேல் தான் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன் தனது ராஜினாமா கடிதத்தை நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்த அந்த ஊழியர், திடீரென தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள அந்த நிறுவனம் தற்போது அவரை தீவிரமாக தேடியும் வருகிறது.

Tags : #CHILE #SALARY CREDIT

மற்ற செய்திகள்