'மீட்டிங் நல்லா போய்ட்ருக்கப்போ...' திடீர்னு 'அது' வந்ததும் ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டாங்க...! 'க்ளோஸ் பண்ண பண்ண வந்துகிட்டே இருக்கு...' - ஜூம் மீட்டிங்கில் ஹேக்கர்ஸ் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சிட்டி ஃபேன்ஸ் யுனைடெட் உறுப்பினர்களை ஒன்றிணைத்து கேள்வி பதில் அமர்வுக்காக கால்பந்தாட்ட அமைப்பான செஸ்டர் எஃப்சியின் மேலாளர் அந்தோனி ஜான்சன் என்பவர் ஜூம் செயலி மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம் அனைவரையும் திக்குமுக்காட செய்தது. திடீரென ஒரு நிர்வாண பெண்ணின் ஆபாசபடம் தெரிய தொடங்கியது. அதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த படத்தை அகற்ற அகற்ற மீண்டும் அந்த பெண்ணின் நிர்வாணப்படம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஒருக்கட்டதில் பொறுக்க முடியாமல் கூட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதன்பிறகு இதுகுறித்து அவர் ட்வீட் செய்கையில், "செஸ்டர் எஃப்சி ஜூம் கலந்துரையாடலில் கண்ட விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை."
இந்த கூட்டத்தில் திடீரென தோன்றிய ஆபாச படத்தின் மூலம் யாரையாவது புண்படுத்தினால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், நாங்கள் அதை விரைவில் அகற்றினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் ஆபாசப்படம் தோன்றியதால் கூட்டத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூட்டத்தை முடித்துக்கொண்டோம்.
உங்கள் கேள்விக்கான பதில்களை வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவோம்.” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
