'மொத்தமாக 5 லட்சம் கணக்குகள் அபேஸ்! இந்த செயலி மூலம் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றவங்க ஜாக்கிரதை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வீடியோ கான்ஃபரன்சிங் செயலியான ஜூம் ஆப்பில் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெருமளவில் தாக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டிருப்பதால், கொரோனா பரவுவதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முறைகள் கையாளப்பட்டுள்ளன. இதனால் பலரும் வீட்டில் இருந்தே பணிபுரிகின்றனர். இதற்கென பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
அவற்றுள் முக்கியமான ஆப்பான ஜூம் ஆப்பினை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் இந்த தளத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர், விபரங்கள் உள்ளிட்டவற்றுடன் கூடிய 5 லட்சம் கணக்குகள் டார்க் வெப் எனப்படும் இருள்வலை தளத்தினால் திருடப்பட்டு ஒரு கணக்கு 15 பைசாவுக்கு சர்வதேச வலைதளங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உட்பட ஜெர்மனி, தைவான், சிங்கப்பூர், நியூயார்க்கின் கல்வி நிறுவனங்கள் தொடங்கி நாசா வரையிலும் இந்த ஆப்பை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.