இந்த 'மெரட்டுற' வேலையெல்லாம் என்கிட்ட செல்லாது... பெரிய 'ஆப்பாக' வைத்த கனடா பிரதமர்... 'கடுப்பில்' சீன அதிபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து கனடா நாடும் சீனாவுக்கு எதிரான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவவிட்டு வேடிக்கை பார்க்கும் சீனா பிற நாடுகளுடன் வாண்டட்டாக சென்று வம்பிழுத்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுடனும், எல்லைப்பிரச்சினையை வைத்து இந்தியாவுடனும் பிரச்சினை செய்து வருகிறது. இது மட்டுமின்றி நேபாளம் போன்ற சிறிய நாடுகளின் கிராமங்களை அபகரித்து கொள்வதும் சீனாவுக்கு பொழுதுபோக்காக உள்ளது.
இந்த நிலையில் கனடா நாட்டையும் சீனா மிரட்டிய விவகாரம் தற்போது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதையடுத்து கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
தற்போது அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இதனால் அதிர்ந்து போன சீனா கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி, மைக்கேல் ஸ்பேவர் என்னும் இருவரும் சீனாவை உளவு பார்த்ததாக கைது செய்துள்ளது. அதோடு இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், மெங் வான்சூவை விடுவிக்க வேண்டும் என கனடா அரசுக்கு சீனா கெடு விதித்துள்ளது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்து விட்டார். அதோடு குற்றவாளிகளை நாடு கடத்த ஹாங்காங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார். இதேபோல் ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துவிட்டார். மேலும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஒருமுறை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால் அடுத்தடுத்து மிரட்ட சீனா தயங்காது என்பதால் ஜஸ்டின் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
