எந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உணவகங்களில் சென்று உணவு அருந்துவோருக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா கோரப்பிடியில் இருந்து சிறிது, சிறிதாக மீள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா அதிகம் உள்ள நாடுகளை தவிர்த்து, பிற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டு எல்லைகளை திறக்க ஆரம்பித்து உள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாடு உணவகங்களில் சென்று சாப்பிடுவோருக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த சட்டம் நாட்டில் உள்ள மொத்த குடிமக்களுக்கும் பயனுள்ள திட்டம் என சேன்ஸலர் ரிஷி சுனாக் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் பதிவு செய்யும் உணவகங்கள் வழியாக இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், பொதுமக்களுக்கு தள்ளுபடியாக வழங்கும் தொகையானது, ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்குகளில் 5 நாட்களுக்குள் அரசு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற செய்திகள்
