'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > உலகம்லாக்டவுன் காரணமாக சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்த பெண் வினோதமான சம்பவத்தால், அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரான்சு நாட்டிலும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் டோனா போரே என்ற மாணவி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அவசர அவசரமாகத் தனது வீட்டைப் பூட்டிவிட்டு நகரின் மற்றொரு இடத்தில் உள்ள தனது ஆண் நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு வசித்து வந்த அவர் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தனது வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து டோனா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசையாகத் தனது வீட்டிற்குள் சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்தது. அவர் வீட்டிற்குள் வினோதமாக இளஞ்சிவப்பு நிறத்தில் குட்சிகள் போன்றவை படர்ந்து இருந்தது. அது என்னவென்று புரியாமல் அருகில் சென்று பார்த்த பின்பு தான் புரிந்தது. இளம் சிவப்பு நிறத்தில் குட்சிகள் படர்ந்திருந்தது உருளைக் கிழங்கின் தளிர்கள் என்று.
லாக்டவுன் முன்னர் டோனா சமைப்பதற்காக உருளைக் கிழங்கு வாங்கி வந்துள்ளார். சில மாதங்களாக அந்த கிழங்கு வெளியே இருந்ததால் அது தளிர்விட்டு அறை முழுவதும் பரவி உள்ளது. இதையடுத்து இந்த புகைப்படங்களை டோனா தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் வீட்டிற்கு வந்த பின் இதன் அருகில் போவதற்கு எனக்குப் பயமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Après 3 mois d’absence mes pommes de terre ont décidé de pousser sans limite jusqu’à faire des trous dans les joints pic.twitter.com/LBcKBNAhMK
— 𝒹𝓸𝒹𝓸 (@donna9p) June 12, 2020

மற்ற செய்திகள்
