கொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை ஒழிக்கும் மைசூர்பா என கடந்த சில தினங்களாக ஸ்வீட் கடையொன்றின் விளம்பரம் வெளியானது. அதில், ''ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம்... ஆம் மக்களே இது சின்னியம்பாளையத்திலும் வெள்ளலூரிலும் நிறைவேறியது. கொரோனாவுக்கு எதிரான இந்த மூன்றாம் உலகப்போரில், பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக எங்களது மைசூர்பாவை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,'' என அச்சடித்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த ஸ்ரீராம் லாலா கடையில் இன்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, எந்த அனுமதியும் பெறாமல் அவர்கள் இந்த விளம்பரத்தை அச்சடித்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது. கொரோனா கொல்லி மைசூர்பா, மூலிகை மைசூர்பா என்று வெவ்வேறு பெயர்களில் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். மேலும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள் தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என சுமார் 19 வகை மூலிகைகளை அதில் கலந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் 120 கிலோ மைசூர்பாவை கைப்பற்றி அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
