எலிக்கு தங்கப்பதக்கம்...! 'எத்தனையோ மக்களோட உயிர ஒரு எலி காப்பாத்திருக்கு...' இந்த விருது கிடைக்க முழு தகுதியும் எலிக்கு இருக்கு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கம்போடியாவை சேர்ந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் ஆர்வலரான மரியா டிக்கினால் தொடங்கப்பட்ட 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' என்ற அமைப்பு கடந்த 77 வருடமாக மனிதர்களின் நலனுக்கு சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவம் செய்து வருகிறது.
இதுவரை பல நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றிய 34 மோப்ப நாய்கள், 32 புறாக்கள், நான்கு குதிரைகள் மற்றும் ஒரு பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தங்கப்பதக்கத்தை கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா என்ற எலி பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய உடலமைப்பைக் கொண்ட ஒருவகை எலி ஆகும்.
இது கடந்த நான்கு ஆண்டுகளாக கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை அகற்றுவதில் ராணுவத்தினருக்கு உதவி வந்துள்ளது. இதனால் பெரும் ஆபத்துக்கள் தவிர்க்கப் பட்டுள்ளது.
கம்போடியாவில் பாதுகாப்புகளுக்காக 60 லட்சம் வரை கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். ஆகவே, கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணி வெடிகளை அகற்றி கண்ணி வெடிகள் இல்லாத தேசமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மகவா என்ற இந்த எலியை அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எலியைக் கொண்டு 39 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர். மேலும், வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் மகவா கண்டறிந்துள்ளது. மேலும், இதுவரை 1.41 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் மகவா நிலத்தைத் தோண்டியுள்ளது. எனவே இந்த எலியின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஆண்டிற்கான தங்கப்பதக்கத்தை 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' அமைப்பு மகவாவிற்கு வழங்கியுள்ளது.

மற்ற செய்திகள்
