'கொரோனா நெகட்டிவ்னு வந்த'... 'இவங்க எல்லாருக்கும் மறுபடி டெஸ்ட் பண்ணுங்க'... 'வெளியாகியுள்ள முக்கிய உத்தரவு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அறிகுறிகளுடன் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் (RAT) மூலம் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சில பெரிய மாநிலங்களில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நபர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் (RAT) மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை RT-PCT பரிசோதனை முறைகளைப் பின்பற்றி செய்யப்படவில்லை. அதனால் கொரோனா அறிகுறிகள் தென்பட்டும் அந்த பரிசோதனை மூலம் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் (RAT) மூலம் துல்லியமான முடிவு கிடைத்திருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது என்பதால், முன்னர் அந்த டெஸ்ட்டில் நெகட்டிவ் என வந்திருந்தாலும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கட்டாயமாக மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கொரோனா பாதிப்புடைய ஒருவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதாலேயே மாநிலங்களுக்கு இதை அறிவுறுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.