'ஒயின்ஷாப்பில் புகுந்து சரக்கடிச்ச எலிகள்...' 'மப்பு ஓவராகி எல்லாம் பயங்கர மட்டை...' எப்படி குடிச்சுதுங்குறது தான் மேட்டரே...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 16, 2020 08:26 PM

புதுச்சேரி மாவட்டத்தில் மதுபான கடைகளுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த எலிகள் மது பாட்டில்களை கீழே தள்ளி, சரக்கு அடித்து மயங்கி கிடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

The rats who entered the liquor stores drank alcohol

புதுச்சேரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தடைசெய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அரசின் உத்தரவின் படி கடந்த மார்ச் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு மூடப்பட்ட மதுபானக்கடைகளில் இருந்து எப்படி மது விற்கப்படுகிறது என்ற விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ஆய்வில் கணக்கில் இருக்கும் மதுபானங்களின் எண்ணிக்கை குறைந்த கடைகளையும், அனைத்து மதுபான கிடங்குயும் சீல் வைத்தனர். மேலும் சரக்கு இருப்பில் மாறுபாடு இருந்த 100 கடைகளின் லைசன்ஸ்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 70 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 60 நாட்கள் மூடியிருந்த ஒரு மதுபான படையை ஆய்வு செய்ய சென்ற போது தான் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியும், ஏமாற்றமும் காத்திருந்தது.

கலால் துறையினர் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு கடையில் திடீர் ஆய்வு செய்து மதுபான இருப்பினை கணக்கெடுத்தனர். கடையில் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கை குறைவாகவும் காணப்பட்டது. மேலும் அங்கு மது பாட்டில்கள் உடைந்து கிடந்துள்ளன. ஒயின் பாக்கெட்டுகள் கிழிந்து காணப்பட்டன. இதனால் கடை முழுவதும் நாற்றம் வீசியது.

அப்போது கடையின் உட்புறத்திற்கு சென்று பார்த்தபோது கடைக்கு பின்புறம் உள்ள காலி மனையிலிருந்து ஏராளமான எலிகள் கடைக்குள் நுழைந்து மதுபாட்டில்களை கீழே தள்ளி மதுவைக் குடித்து இருப்பது தெரியவந்தது. மேலும் ஒயின் பாக்கெட்டுகளை கிழித்தும் அதிலுள்ள ஒயின்களை குடித்து போதையில் இருந்துள்ளது. இதனை கண்ட அதிகாரிகள் வந்த வழியே திரும்ப சென்றனர்.

மீண்டும் எலிகள் போதை அடையா வண்ணம் அங்கிருந்த ஓட்டைகளை அடைக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Tags : #RAT