"'ஜாதவ்' பத்தி ஏன் ஒண்ணும் சொல்லல??... அந்த '2' பேர தான் தோனி 'டார்கெட்' பண்ணாரா??..." கேள்விகளை அடுக்கித் தள்ளிய முன்னாள் 'வீரர்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர்களிலேயே பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.
இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள நிலையில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி எளிதாக சென்னையை வீழ்த்தியது.
இந்த போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, தங்களது அணியிலுள்ள இளம் வீரர்களிடம் உத்வேகத்தை காணவில்லை. அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இனிவரும் போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
தோனியின் இந்த கருத்து நேற்று மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் கூட தோனியின் கருத்திற்கு விமர்சனத்தை முன் வைத்தனர். ருத்துராஜ், ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், வாய்ப்புகளை அளிக்காமல் இளம்வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி எப்படி கூறலாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார். 'இளம் வீரர்கள் என தோனி யாரை குறிப்பிட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் ஆகியோரை குறித்து சொல்கிறாரா?. எனக்கு தெரிந்து அவர்கள் இருவரையும் குறித்து தோனி சொல்லியிருக்க மாட்டார். அப்படி அவர்களை தான் உத்வேகம் இல்லை என தோனி குறிப்பிட்டிருந்தால் அது கொஞ்சம் கூட நியாயம் இல்லாத கருத்து' என்றார்.
மேலும், 'ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு அவர்களிடம் ஸ்பார்க் இல்லை என சொன்ன தோனி, ஜாதவ் குறித்து பேசாதது ஏன்? அவரைக் குறித்தும் தோனி பேசியிருக்க வேண்டும்' எனவும் ஓஜா குறிப்பிட்டுள்ளார்.