கொழும்புவில் மேலும் ஒரு வெடிகுண்டு.. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு செயலிழப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 24, 2019 12:00 PM

இலங்கையில் மோட்டார் சைக்கிளில் இருந்து, மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri Lanka police carry out controlled explosion on motorcycle

இலங்கையில் கடந்த ஞாயிறன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொழும்பு நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.  அப்போது கொழும்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாய் திரையரங்கு முன்பாக, சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது.

அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டுச் சென்று வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். அது முடியாததால் வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இதை செய்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இலங்கையில் மக்கள் கூடும், இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன.

Tags : #SRILANKA #BOMBBLAST #CINEMAHALL #COLOMBO #ATTACKS