கண்ணாமூச்சி விளையாடிய போது காணாமல் போன சிறுவன்.. 6 நாளுக்கு அப்புறம் வேற நாட்டுல கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்.. பரபர பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 30, 2023 04:45 PM

வங்க தேசத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில் ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

Boy playing hide and seek found in different country after 6 days

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | திடீர்னு ஒன்று சேர்ந்து இளைஞர்கள் பாடிய பாடல்.. நெகிழ்ச்சிக்குள்ளான திருநங்கை.. வைரல் வீடியோ..!

வங்கதேச நாட்டின் துறைமுக நகரான சிட்டகாங்க் பகுதியை சேர்ந்தவன் ஃபகீம். 15 வயதான ஃபகீம் சிட்டகாங்க் துறைமுகத்திற்கு அருகே தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறான். எப்போதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கன்டெய்னர்களுக்குள் அவனது நண்பர்கள் ஓடி ஒளிந்து கொள்வது வழக்கம். அதேபோல ஃபகீமும் ஒரு கண்டெய்னரின் உள்ளே சென்று ஒளிந்து இருக்கிறான். அப்போது திடீரென கண்டெய்னர் மூடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஃபகீம் சத்தம் போட்டிருக்கிறான். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. களைப்பில் ஃபகீமும் தூங்கிவிட நிலைமை கைமீறி சென்றுவிட்டது.

Images are subject to © copyright to their respective owners.

தனது மகனை காணவில்லை என ஃபகீமின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வங்கதேசத்தில் இருந்து மலேசியா செல்லும் சரக்கு கப்பலில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் உள்ளே, பசியால் வாடிக் கொண்டிருந்தான் சிறுவன் ஃபகீம். கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஃபகீம் காணாமல் போன நிலையில் கப்பல் ஆறு நாட்கள் கழித்து மலேசிய துறைமுகத்தை சென்றடைந்து இருக்கிறது.

தொடர்ந்து கண்டெய்னருக்குள் இருந்து சத்தம் வந்ததால் அதனை திறந்து பார்க்கும் போது உள்ளே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் துறைமுக அதிகாரிகள். ஒருவேளை சிறுவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் மலேசிய காவல்துறையினர் இது குறித்த சாரணையில் இறங்கினர். ஆனால் நடந்த சம்பவத்தை சிறுவன் மூலமாக அறிந்த காவல்துறையினர் வங்கதேசத்தில் உள்ள அவனது பெற்றோரையும் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி இருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதில் குற்றப் பின்னணி ஏதும் இல்லை எனவும் விளையாடும்போது சிறுவன் தவறுதலாய் கண்டனருக்குள் சிக்கிக் கொண்டது இத்தனை சிரமத்திற்கும் காரணமாக அமைந்துவிட்டதாகவும் மலேசிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து சிறுவனை அவனது பெற்றோருடன் சேர்க்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read | பிறந்தநாள் Giftனு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே..😅 வீடியோ..!

Tags : #BOY #PLAYING #HIDE AND SEEK #COUNTRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Boy playing hide and seek found in different country after 6 days | World News.