'இந்த எளிய சோதனை போதும்'... 'கொரோனாவால் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களை கண்டறிய'... 'ஆய்வாளர்கள் புது கண்டுபிடிப்பு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக ஆபத்தில் இருப்பவர்களை இரத்த பரிசோதனையை வைத்து கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக ஆபத்தில் இருப்பவர்களை ஒரு எளிய இரத்த பரிசோதனையை வைத்து கணிக்க முடியும் என பின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நைட்டிங்கேல் ஹெல்த்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வில் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு சிக்னேச்சரை அடையாளம் கண்டுள்ள ஆய்வாளர்கள், இந்த மூலக்கூறு உள்ளவர்களை கொரோனா வைரஸ் பாதிக்கும் போது கடுமையான அறிகுறிகளை காட்டும் எனவும், இந்த மூலக்கூறு சிக்னேச்சர் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட 5 முதல் 10 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கண்டுபிடிப்பு இதுவரை அறியப்படாதது, புதுமையானது எனக் கூறியுள்ள அவர்கள், கொரோனா பாதிப்பைத் தவிர்ப்பதற்கு சிறப்பு முன்னெச்சரிக்கைகள் தேவைப்படும் நபர்களை அடையாளம் காணவும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் தேவை என்ற நிலையில் ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த சோதனையை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள மக்களை அடையாளம் காண்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கொரோனா பாதிப்பின் காரணமாக ஒரு நபருக்கு லேசான அறிகுறிகள் உருவாகுமா அல்லது அவர் கடுமையாக பாதிக்கப்படுவாரா என கணிக்கக்கூடிய இரத்த பரிசோதனையை தொடங்கியுள்ள நைட்டிங்கேல் ஹெல்த் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரான பீட்டர் வூர்ட்ஸ், "கொரோனாவால் அதிக ஆபத்தில் இருப்பவர்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, பல பயோமார்க்ஸர்களின் மூலக்கூறு சிக்னேச்சர்களை பார்ப்பது தான்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
