அடக்கடவுளே! 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
இந்த நிலையில் , 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் ஆக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆக்லாந்து முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்தார். 102 நாட்களுக்கு பின் கொரோனா பரவத்தொடங்கி இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.